
SAYEE PRACHAR SEVA TRUST - UNIQUE GREEN SAIBABA
பக்திப் பரவசமூட்டும் பச்சைநிற சாயிபாபா
சாயிபாபா அருளால் ஸ்ரீ சாயிமார்க்கம் ஆன்மிக இதழ் ஆசிரியர் சாயி ஆத்ம ஸ்வரூபி ஸ்ரீ.எஸ்.லெக்ஷ்மிநரசிம்மனுக்கு அதி அற்புதமான அதிசயமான பச்சைநிற சாயிபாபா மார்பிள் சிலை ஷிரடியில் இருந்து தெய்வாதீனமாகக் கிடைத்தது.சென்னை ஊரப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பச்சைநிற சாயிபாபா தியானமையத்தில் - GREEN SAIBABA MEDITATION CENTER - ல் இச்சிலை பிரதானமாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.சாயிபக்தர்கள் அனைவரும் இப்புனிதப் பணியில் பங்கேற்று சாயிபாபா அருள் பெற முன்வருமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இக்கட்டிடப்பணிகளுக்கான நன்கொடைகளுக்கு
80 G - வருமான வரிவிலக்கு உண்டு.
The World Unique Green Saibaba Meditation Center - Chennai - Urapakkam is under construction. By the shirdi shree sayee baba's grace and with the inspiration of SHREE SAYEE MARGGAM magazine - on behalf of Sayee Prachar Seva Trust We are constructing this meditation center to the divine purpose of spiritual upliftment and Charitable activities with 80 G Tax Exemption
To learn more, simply browse through our site.

HISTORY OF GREEN SAIBABA
S.LAKSHMINARASIMHAN'S DIVINE EXPERIENCE
ஸ்ரீ சாயிபாபா அருளால் ஸ்ரீ சாயிமார்க்கம் ஆன்மிக இதழ் தொடங்கி ( 2002 முதல் ) சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது.தமிழின் முழுநேர எழுத்தாளர் மற்றும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் ஆக இருந்த என்னை சாயிபாபா தடுத்தாட்கொண்டு ஸ்ரீ சாயிமார்க்கம் தொடங்க வைத்தார்.
ஸ்ரீ சாயிமார்க்கம் பெயரில் ஆண்டு தோறும் விருதளிப்பு விழா நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து சாயிபாபா பக்தி நூல்களை எழுத வைத்தார்.
பச்சைநிற சாயிபாபா ஷிரடியில் இருந்து என்னோடு வந்தார். அவரை வைத்து சுமார் 300 க்கும் மேற்பட்ட பஜனைகள், சென்னை மேற்குமாம்பலத்தில் பச்சைநிற சாயிபாபா தரிசன மையம்,ஷிரடி சாயி லிகித நாமஜப ஹோமம்,32 மணி நேர தொடர் சாயி நாம கீதங்கள் - ஓம் சாயி....ஸ்ரீ சாயி...ஜெய ஜெய சாயி...ஊரப்பாக்கத்தில் மேலும் ஒரு துவாரகாமாயி,அன்னதானம்,கல்வி உதவி மற்றும் நலத்திட்டப்பணிகள்,சிறப்பு பூஜைகள்,பெளர்ணமி தோறும் ஸ்ரீ சக்ர மஹாமேருவிற்கு அபிஷேகம் & நவாவரண பூஜை - இவை தவிர புத்தாண்டு பூஜை,பஜனை,நவராத்திரி பூஜைகள்,குருபூர்ணிமா,ஸ்ரீ ராமநவமி ஸீதா கல்யாணம் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அன்னதானத்துடன் இணைத்தே நடத்தப்படுகின்றன.
தற்போது பச்சைநிற சாயிபாபா தியான மையம் சென்னை ஊரப்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது.70 சதவீத பணிகள் முடிந்து மீதம் நடைபெற உள்ளன.அதற்கான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
பச்சைநிற பாபாவின் பச்சை நிறமே அதன் சிறப்பம்சம்.இவர் புதன் கிரஹ அம்சமாகவும்.மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் அம்சமாகவும் அருள் பாலித்து வருகிறார்.

HISTORY OF GREEN SAIBABA
We wish to explain about the world unique green colour italian marble saibaba statue and request your valuable divine support to complete the construction of this world unique meditation center at Chennai